மதுரை மாவட்டம், முள்ளிப்பள்ளம் ஊராட்சி 5-வது வார்டில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், வ. உ. சி. தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் வெளியேறக் கூடிய கழிவு நீர் செல்ல வழி இல்லாமல், தெருக்களில் ஆங்காங்கே குட்டைகளாக இருப்பதால் கொசு உற்பத்தி ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாது, தெருவை மறைத்து வீட்டின் அருகே சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலே உள்ள புளியமரத்தால், வீடு சேதமடைந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பதாலும் இதை அகற்ற வருவாய்த்துறையிடம், தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது. இந்த புளியமரத்தையும், அகற்ற வேண்டும்என்று அப்பகுதியில், குடியிருப்பவர்கள் தெரிவித்தனர்.
முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் இல்லாமல் பொதுமக்கள் அவதி.., தொற்றுநோய் பரவும் அபாயம் ..,
