அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கோற்றுள்ளார். இன்று காலை முதல் பழனியில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் நடந்த காலசாந்தி, சிறுகாலசாந்தி பூஜையில் இபிஎஸ் பங்கேற்றார். இதன்பின், வேடன் அலங்காரத்தில் இருந்த முருகனை வழிபட்ட அவர், போகர் சித்தர் பீடத்தில் திடீரென்று அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தியானத்திற்கு பெயர்பெற்ற ஓபிஎஸ்ச-ஐ மிஞ்சும் அளவிற்கு இபிஎஸ் தியானம் செய்த வருகிறார்.