• Thu. May 2nd, 2024

குமரியில் பாதிரியார் திமுக பிரமுகர் உள்பட மூவர் மீது குண்டர் சட்டத்தில் தண்டனை

குமரி மாவட்டம் திங்கள் சந்தையை அடுத்துள்ள மைலோடு மடத்துவிளையை சேர்ந்த தமிழக அரசின் போக்குவரத்துக்கழகம், கன்னியாகுமரி பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றிய சேவியர் குமார் (45) இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒன்றிய செயலாளராகவும் இருந்தார்.

மைலோடில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயத்தின் கட்டு பாட்டில் உள்ள பள்ளியில் சேவியர் குமாரின் மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் உள்ள பிரச்சனையில். தேவாலைய பங்கு தந்தை ராபின்சன், சேவியர் குமார் மனைவி மீது எடுத்த நடவடிக்கை குறித்து பேசுவதற்காக பங்குதந்தை மற்றும் பங்கு பேரவை பொறுப்பாளர்கள், கடந்த ஜனவரி மாதம் 20_ம் தேதி பாதிரியார் இல்லத்திற்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்த நிலையில் சேவியர் குமார் தன்னம் தனியாக பாதிரியாரது மோடைக்கு (அலுவலகம்) சென்றவரிடம்.

பாதிரியார் ராபின்சன் மற்றும் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்பாபு, ஜஸ்டஸ்ரோக் மற்றும் தேவாலைய பேரவையை சேர்ந்த 15_க்கும் அதிகமானவர்கள், சேவியர் குமார் இடம் நடத்திய பேச்சூ வார்த்தைக்கு உடன் படாத சேவியர் குமாரை, பாதிரியார் ராபின்சன் ஐயர்ன் பாக்ஸ் கொண்டு தாக்கிய போது உடன் இருந்தவர்களும் சேவியர் குமாரை தாக்கியதால், பாதிரியாரின் மேடையிலே ரெத்தம் சொட்ட தரையில் சாய்ந்த சேவியர் குமார் அதே இடத்தில் மரணம் அடைந்தார்.

உன்னை போல் உன் அயலானையும் நேசி என போதித்த இயேசுவின் போதனைகளை மக்களுக்கு போதிக்க வேண்டிய பாதிரியாரும் அவருடன் இருந்தவர்கள் தாக்குதலில், அவர்கள் மதத்தை சேர்ந்தவரை கொலை செய்தி அந்த நாளில் மாவட்டம் முழுவதும் ஒரு ‘தீ’யாக பரவியது.

சேவியர் குமார் கொலைக்கு காரணமானவர்கள் என பாதிரியார் ராபின்சன், வழக்கறிஞர் ரமேஷ்பாபு, ஜஸ்டஸ் ரோக் உட்பட 15_பேர் மீது இரணியல் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

பாதிரியார் ராபின்சன், வழக்கறிஞர் ரமேஷ்பாபு, ஜஸ்டிஸ் ரோக் ஆகியோரை காவல்துறை கைது செய்து பாளையம் கோட்டை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டம் மட்டும் அல்லாது அருகாமையில் உள்ள பிற மாவட்டங்களிலும். பாதிரியார், வழக்கறிஞர் உடன் 10_க்கும் அதிகமான பேர்கள். தன்னம்தனியாக இருந்த சேவியர் குமாரை அடித்தே கொலை செய்தது பரபரப்பாக பேசப்பட்டது.

காவல்துறை இவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவெடுத்து, இதற்கான அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு, குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்டு, ஆட்சியர் ஸ்ரீதர் அனுமதி அளித்ததை தொடர்ந்து 3_பேர் மீது குண்டர் சட்டம் அமுல் ஆனது. இதற்கான ஆணையை பாளையம் கோட்டை சிறை அதிகாரிகள் இடம் இரணியல் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

பாதிரியார் ராபின்சன் வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளருமான ரமேஷ்பாபு மீது குண்டர் சட்டம் அமுலுக்கு வந்தது குமரியில் பொது மக்களின் மத்தியில் ஒரு பேசு பொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *