• Mon. Mar 24th, 2025

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி. கோவளம் மீனவ மக்களின் பயன்பாட்டிற்கு கழிவுநீர் வெளியேறும் பாதையை சீர் அமைத்து, நிழற்குடை அமைத்து இன்று அதனை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தில் கழிவுநீர் வெளியேறும் பாதையை சுமார்15 லட்சம் ரூபாய் செலவில் சொந்த பணத்தில் சீர் அமைத்து கொடுத்ததோடு, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 3 லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடையும் அமைத்து கொடுத்து, இன்று அதனை மீனவ மக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி. அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி. பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தில் மழை காலங்களில் ஊருக்குள் புகுந்துள்ள வெள்ளம் மற்றும் கழிநீர் வெளியேறும் பாதை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி அடைத்து இருந்தது. இதன் காரணமாக இந்த மீனவ கிரம மக்கள் மழை காலங்களில் மிகுந்த சிரமப்பட்டு வந்தார்கள். மேலும், இது குறித்து குமரி பாராளுமன்ற உறுப்பினர் கவனத்திற்கும் கொண்டு சென்றதோடு மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் பாதையை சீர் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள். இவ்வாறு வந்த மீனவ மக்களின் கோரிக்கையை அடுத்து கோவளம் மீனவ கிராமத்தில் கழிவுநீர் வெளியேறும் பாதையை சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் சொந்த பணத்தில் சீர் அமைத்து கொடுத்ததோடு மூன்று லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அப்பகுதி மக்களுக்கு நிழற்குடையும் அமைத்து கொடுத்த விஜய் வசந்த் எம். பி இன்று அதனை மீனவ மக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். இதனை மீனவ கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
இதில் பங்குதந்தை கிஷோர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், மாநில செயலாளர் சினிவாசன், வர்த்தக காங்கிரஸ் வட்டார தலைவர் ராயப்பன், ஒன்றிய கவுன்சிலர் சௌமியா கருணாகரன், ஜவகர், தாமஸ், மீனவர் காங்கிரஸ் பீட்டர், ஜேம்ஸ், ஜான்போஸ்கோ, மரிய அந்தோணி, கிங்ஸ்சிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.