• Thu. May 2nd, 2024

குமரியில் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணிக்கு, நான்காவது முறையாக வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு புது முகத்திற்குதான் வாய்ப்பு என்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவிற்கு தாவினால் ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து விடும் என நம்பி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அவகாசம் இருந்த நிலையில், ஏன் இந்த முடிவு என விஜயதரணியிடம் கேட்ட போது, நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கேட்க இதுதான் உரிய தருணம் என்பதால் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என சொன்னார்.

குமரி மாவட்டத்தில் உள்ள பெரும் பான்மை அ தி மு க கட்சியினருக்கே தெரியாத ஆர். விஜயகுமார் என்பவரை ஜெயலலிதா நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வேட்பாளரக அறிவித்ததும். முதலில் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்த கேள்வி யார் இந்த விஜயகுமார்.? பத்திரிகை செய்தியாளர்கள் முதலில் ஓடிய இடம் அ தி மு க வின் மாவட்ட அலுவலகத்திற்கு. அப்போது மாவட்ட செயலாளராக இருந்தவர் தளவாய் சுந்தரம். கட்சி அலுவலகத்தில் இருந்த சிலரிடம் விஜயகுமார் பற்றி விசாரிக்க எங்களுக்கே யார் என்று தெரியவில்லை என சொன்ன நிலையில், அங்கிருந்த,கட்சியை சேர்ந்த முதியவர் சொன்ன தகவல், மணவாள குறிச்சையை சேர்ந்தவர், வழக்கறிஞர் அணியில் ஏதோ பொறுப்பில் உள்ளார், நிழல் படம் எதாவது கிடைக்குமா என பத்திரிகையாளர்கள் நீதி மன்றத்திற்கு சென்று அதிமுக வழக்கறிஞர்கள் இடம் விசாரிக்க கிடைத்த தகவல்.

நாகர்கோவிலில் அரசு சுற்றுலா மாளிகையில் எதிரில் உள்ள தெருவில் வசிக்கிறார் என கேட்டு அந்த இடத்திற்கு செல்லும் முன் ஊடகவியலாளர் கள்,குறித்த வீட்டை தேடி சென்று அவரது மனைவியை சந்தித்து. ஜெயலலிதா அவர். விஜயகுமாரை நாடாளுமன்ற மேலவை வேட்ப்பாளராக அறிவித்துள்ளார்,போட்டோ……. வேண்டும் என கேட்க.., அவரோ எனக்கு தெரியாது என சொல்லியவாறு வீட்டினுள் சென்று சிறிது நேரத்தில் ஒரு பழைய பாஸ்போர்ட் நிழல் படத்தை கொண்டு கொடுக்க அதை வைத்துத்தான். இவர்தான் ஜெயலலிதா அறிவித்துள்ளார் மேலவை வேட்பாளர் விஜயகுமார் என செய்தி வெளியானது.

அ தி மு க., கட்சியின் பெரும் பான்மையினருக்கே தெரியாதவர். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அடுத்து குமரி மாவட்டத்தின் ஒன்றிணைந்த மாவட்ட செயலாளர் என்ற பதவிகளை பெற்றபோது.

தளவாய் சுந்தரம் ஒரு கனத்த மெளனத்துடன் அமைதி காக்க. விஜயகுமாரை பெரும்பான்மை கட்சியினர் ஏற்றுக்கொள்ளத நிலையே தொடர. குமரி அதிமுகவில் ஒரு புதிய கோஸ்ட்டி உருவானது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பள்ளிகளில் புதிய கட்டிடங்களுக்கு நிதி உதவி,பாலம் பணிகள் என செய்துவந்த விஜயகுமார். சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி ஜீரோ முனையில் உயர்ந்த கம்பத்தில் தேசிய கொடியை ஏற்ற ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் துறைசார்ந்த அனுமதியை எழுத்து மூலம் பெற்றவர். தேசிய கொடி கம்பம் அமைக்க குறிப்பிட்ட இடத்தில் பூஜை இட்டு பணிகளை துவக்கிய பின் அன்றைய குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே விடம், விஜயகுமார் மனு கொடுக்க. ஆட்சியர் வெகு காலம் கடத்த. கடைசியில் ஆட்சியர் அனுமதித்த இடம் சுசீந்திரம் சந்திப்பு பழையாற்றின் கரையில். முக்கடல் பரப்பின் முன் தேசிய கொடி கம்பத்தை நிறுவ நினைத்தவர் கனவை நிறைவேறாது செய்தவர், கன்னியாகுமரி முன்னாள் மக்களவை உறுப்பினரான பொன். இராதாகிருஷ்ணன் தான் காரணம் என்ற செய்தி அன்று பரவியது.

விஜயகுமார் அவரது பதவிக்காலம் முடியும் முன் வான் உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றும் முயற்சியில். கடைசியாக.கன்னியாகுமரிக்கு சற்று முன்புள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில்.

திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ முகாம் அதிகாரி, ராணுவ படையினர்,குமரி மாவட்டத்திலிருந்து முப்படைகளின் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை வீரர்கள், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், திருநெல்வேலி பாஜக சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அனைத்து கட்சியை சார்ந்தவர்களை வைத்து உயர்ந்த கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிவிட்டார். தேசிய கொடி கம்பத்தின் உயரத்திற்கு ஏற்ப மிகப் பெரிதாக இருந்தது.

பாங்கோடு ராணுவ முகாம் அதிகாரியிடம் தேசிய கொடியை பராமரிப்பு பணியும் அன்றைய தினமே ஒப்படைக்கப்பட்டது. தேசிய கொடி கம்பம் ,நிறுவப்பட்டுள்ள புல் வெளியை பராமரிப்பு பணி அகஸ்தீசுவரம் பேரூராட்சி இடம் ஒப்படைக்கப்பட்டது.

தேசிய கொடி கம்பிரமாக பட்டொளி வீசி பறந்த காட்சி பார்ப்போர் மனங்களில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாம் இரண்டே நாளில் முற்றுப்புள்ளி ஆய்விட்டது.!?

தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்ட இடத்தில் காற்றின் அழுத்தம் மிகுந்து காணப்பட்டதால் கொடி இயற்றியே இரண்டாவது நாளில் தேசிய கொடி காற்றின் வேகத்தில் கிழித்து போனது. கொடி உடனடியாகஇரக்கப்பட்டு அடுத்த பத்து நாட்கள் இடைவெளியில், முதலில் இயற்றிய கொடியை விட சற்று சிறியதாக மீண்டும் புதிய கொடி ஏற்றிய இரண்டு தினங்களில் இரண்டாவது கொடியும் கிழித்து போகவே. அதன் பின் கொடியேற்றாது வெறும் கம்பம் மட்டுமே பட்ட மரம் போல் இன்று வரை நிற்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த காலையில் நாகர்கோவிலில் எம்.ஜி.அர் யின் 100_ஆண்டு விழா நடந்த போது.ஆளும் காட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயகுமார் மேடையின் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்.

மக்களவை உறுப்பினராக இருந்தும் சமகால அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர். திடிரென்று பிரதமர் மோடியை சந்தித்து விநாயகர் படத்தை கொடுத்த போது எடுத்த நிழல் படத்தை. குமரி மாவட்டத்தில் உள்ள பத்திரிகைகளில் ஒரு செய்தியாக வரசெய்தார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக் காலம் முடிந்ததும்,அவரது உடல் நிலைக் காரணமாக அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருந்தார்.

பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து போன அடுத்த நாள் பத்திரிகைகளில்.அ தி மு க.,கட்சியில் இருந்து விலகி பாஜாகவில்.தமிழக பாஜக தலைவர் முன்னிலையில், விஜயகுமார் பாஜகவில் சேர்ந்தார் என்ற செய்தியை அடுத்து வரும் செய்திகள். கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்த விஜயதரணியை போன்று, நேற்று காலை (மார்ச் 15)ல் பாஜகவில் சேர்ந்த விஜயகுமாரும். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தலில் என்ற செய்தி குமரி மாவட்டத்தில் பரவி வருகிறது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜகவின் வேட்ப்பாளர் யார் என்ற கேள்வி அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மனதில் எழுந்து நிற்கும், ஒரு பெரிய கேள்விக்குறியாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *