• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ByN.Ravi

Mar 8, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த கிளை முன்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மத்திய மோடி அரசின் தேர்தல் பத்திர மோசடியை கண்டித்தும், பல்லாயிரம் கோடி தாரை கொடுத்த பாஜகவை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசு மக்களை ஏமாற்றி 10 ஆண்டுகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இதுவரை செய்யவில்லை என்றும், தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை சரியான முறையில் தரவில்லை என்று கூறியும் விரைவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மூடு விழா காண உள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். இதில், நிர்வாகிகள் ஜெயமணி, ராமமூர்த்தி, மலைக்கனி, சரந்தாங்கி முத்து, மகளிர் அணி நிர்வாகி செல்லப்பா
சரவணன், சசிகுமார், பாலமேடு வைரமணி, சந்திரசேகரன், சோழவந்தான் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.