• Sun. Mar 16th, 2025

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

Byவிஷா

Jul 4, 2023

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேக்கப் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் அந்நாட்டை கைப்பற்றியதிலிருந்து கடுமையான உத்தரவுகளை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது மற்றொரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். ஆப்கனிஸ்தான் நாடு முழுவதும் உள்ள மற்ற மாகாணங்களைப் போலவே, காபூலும் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளது. இதற்கான வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தலிபான் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அகிஃப் மஹ்ஜர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து கூறியுள்ளார்.
ஆண்கள் வேலை இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இப்போது என்ன செய்ய? பசியால் சாக வேண்டும்’ என, மேக்கப் கலைஞர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.