• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வழக்கை திரும்ப பெற கோரி குடியேறும் போராட்டம்..,

ByVasanth Siddharthan

Sep 2, 2025

திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகுடி கிராமத்தில் வசித்து வரும் முத்தரையர் சமூக மக்கள் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் நடத்துவதற்காக 300-க்கு மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.

திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகுடி கிராமத்திலுள்ள கோயில்(ஆகஸ்ட் 29-ஆம் தேதி) திருவிழாவில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகம் இடைய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவரது மனைவி வர்ஷா பூதகுளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார்.தொடர்ந்து வருவாய் துறையினர் போலீசார், தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முத்திரைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த FIR நகலை காண்பித்த பிறகு நான்கு மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டார். இதன் காரணமாக முத்தரையர் சமூக மக்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கை திரும்ப பெறக்கோரி 300-க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாயத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதற்காக *ஆடு, டிவி, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முத்தரையர் சமுதாய மக்கள் வந்திருந்தனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்.

தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே 300க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாயத்தினர் *ஆடு, டிவி, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி போன்றவைகளை கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.