காரியாபட்டியில் மழையினால் சேதம் அடைந்த மின்கம்பங்கள் உடனடியாக பராமரிப்பு செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக நகர் பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் பழுது அடைந்தன. இது குறித்து இதனால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் இதனால் பல இடங்களிலே மின்தடை ஏற்பட்டது .இது குறித்து உடனடியாக பேரூராட்சி தலைவர் செந்தில் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேற்று இரவு தற்காலிகமாக மின்தடையை சரி செய்யப்பட்டது.

தற்பொழுது பழுதடைந்த மின்கம்பங்களை சரிபார்ப்பு பணிகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையிலே நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் செந்தில் மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் உதவியை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை நாள் சேதம் அடைந்த மின் கம்பங்களை உடனடியாக சீரமைப்பு பணிகளை செய்ய செய்த பேரூராட்சி தலைவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.









