• Wed. Dec 11th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 7, 2022

நற்றிணைப் பாடல் 36:

குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

பாடியவர் சீத்தலைச்சாத்தனார்
திணை குறிஞ்சி

பொருள்:

புலி பெண்யானையைத் தாக்கிவிட்டு, அது புலம்பும்படி ஆண்யானையைக் கொல்லும்.  இவை மேயும் மலை அவன் மலை. அம்மலையில் குறுகிய கைகளை உடைய பெரிய ஆண்புலியானது இரையைக் கொள்வதில் வலிமை பெற்றது. அங்கே தாழ்ந்த நீர்நிலையில் ஆண்யானை ஒன்று குளித்துக்கொண்டிருக்கிறது. அவ்வூரில் தலைவன், தலைவி பழகும் முiறையப் பற்றி ஊர்ப் பெண்கள்  பிறருக்கும் கேட்டுகுமாறு புறம் பேசுகின்றனர். ஊர்ப் பெண்கள் அலரும், அம்பலும், கௌவையுமாகத் தூற்றுகின்றனர். அதனால் ஊர் என்னை இழந்துவிட்டது. – இவ்வாறு தலைவி சொல்வது போல் தோழி சொல்கிறாள். நள்ளிரவில் தலைவியை அடைய வந்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்பட்டிச் சொல்கிறாள்.