• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 7, 2023

நற்றிணைப் பாடல் 265:

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
பாரத்து அன்ன – ஆர மார்பின்

சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

பாடியவர் : பரணர்
திணை : குறிஞ்சி

பொருள் :

காய்ந்த புல்லை மேய்கின்ற உதிர்ந்த கொம்பினையுடைய முதிர்ச்சியையுடைய சேற்றில் ஓட்டி வருந்தச் செய்த புள்ளியையும் வரியையும் உடைய கலைமானை; எய்யும் ஒலியையுடைய அம்பினையும் வில்லினையுமுடைய வீரர் தலைவனாகிய பொலிவு பொருந்திய தோளிலே கவசம் பூட்டிய மிஞிலி என்பவனாலே காவல் செய்து வருகின்ற; பாரம் என்னும் ஊரைப்போன்ற ஆத்திமாலையையுடைய மார்பையுடைய சிலவாகிய ஊர்களை ஆட்சிகொண்ட செங்கோலையுடைய சோழனுடைய; ஆரேற்றைப் போன்ற இவளுடைய தலைவியாகிய மழை போன்ற கொடையும் கள்ளுணவுமுடைய ஓரியென்பவனது கொல்லி மலையிலிருக்கின்ற; செருக்கிய மயிலைப் போன்ற நம் காதலியாவாள்; அம் மயிலின் கலாபம் போன்ற தழைந்த மெல்லிய கூந்தலையுடையாள்; நம்பாலள் அல்லளோ? ஆதலின் நெஞ்சமே கவலை கொள்ளாதே; நின்செயல் விரைய முடிவு பெறுங்காண்!