• Wed. May 1st, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 8, 2023

நற்றிணைப் பாடல் 265:

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்; அன்றியும், எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல் – வாழியர், ஐய! – வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?

பாடியவர் : கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
திணை : முல்லை

பொருள் :

ஐயனே! வாழ்வீராக! நீவிர் எம்மைக் கைவிட்டு வேற்று நாட்டுக்குச் செல்வீராயின்; அக் காலத்தில் யாம் கொல்லைகளிலே தனியே இருக்கும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த குறுகிய காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளிய பூ; ஆடு மேய்த்தலையுடைய இடையன் அணிந்துகொள்ளுமாறு மலராநிற்கும் அகன்ற இடத்தையுடைய சீறூரின்கண்ணே யிருத்தலையுடையேமாயிரா நின்றேம்; அங்ஙனம் உறைகுவதொன்றுமே எங்கள் விருப்பத்துக்குப் பொருந்துதலா யிருக்கும்; அல்லாமலும் யான் கூறுவதில் ஒருபயனும் இல்லையாயினும் இன்னும் ஒன்று கூறாநிற்பேன்; நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதி எம்மை இல்லின்கண் இருத்தியகாலை யாம் வருந்தியக்கால்; பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *