• Tue. Sep 17th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 25, 2023

நற்றிணைப் பாடல் 235:

நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ? – மடந்தை! உவக்காண் தோன்றுவ, ஓங்கி – வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!

பாடியவர் : காரிக்கண்ணனார்
திணை:

பொருள்:

மடந்தாய்! வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி “ஆய் அண்டிரன்” சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ? இதுகாறும் மிகப் பசந்து தோளும் வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *