இசை சாம்பவான்கள் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ள வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் ஏ.ஆர் .ரகுமானும் விமான நிலையத்தில் இருக்கும் வாகனத்தில் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் வெவ்வெறு கண்டங்களிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் செல்லும் இலக்கு எப்போதும் தமிழ்நாடு மட்டுமே ” என்று பதிவிட்டுள்ளார்.