ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.
பாடியவர்: உகாய்க்குடி கிழார்.
பாடலின் பின்னணி:
பொருள் தேடவேண்டியதின் இன்றையமையாமையைப் பற்றித் தலைவன் எண்ணிப் பார்க்கிறான். பொருள் தேட வேண்டுமானல்இ வெளியூருக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால்இ தன் மனைவி தன்னுடன் வருவாளோ அல்லது தான் மட்டுயும் தனியே செல்ல வெண்டுமோ என்று தலைவன் சிந்திப்பதை இப்பாடல் சித்திரிக்கிறது.
பாடலின் பொருள்:
நெஞ்சேஇ இரவலர்க்குக் கொடுப்பதும்இ இன்பங்களை அனுபவிப்பதும், பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி, பொருள் செய்வதற்குரிய செயல்களை, அளவுகடந்து எண்ணுகிறாய். பொருள் செய்வதற்குத் துணையாக, அழகிய மாமை நிறத்தையுடைய என்னுடைய மனைவியும் என்னுடன் வருவாளா? அல்லது என்னை மட்டும் போகச் சொல்லுகிறாயோ? சொல்லுவாயாக.