• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 6:

Byவிஷா

Jan 18, 2025

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே.

பாடியவர்: பதுமனார்
திணை: நெய்தல்

விளக்கம் :
தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பொருள்;
“இருட்டை உடையது இந்த இரவு. இந்த யாமத்தில் பேசுதல் அடங்கி, இனிதாய் அடங்கினர் மக்கள்;. உயிரினங்கள் வெறுப்பில்லாமல், பரந்த இடத்தையுடைய உலகத்தில் உறங்குகையில், நான் ஒருத்தி மட்டும் தூங்காமல் தனித்திருக்கிறேன்.”