• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 28:

Byவிஷா

Aug 27, 2022

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன்மாதோ-
மணி என இழிதரும் அருவி, பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி,
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

பாடியவர் முதுகூற்றனார்
திணை பாலை

பொருள்:
தலைவன் என் கையைப் பிடித்துத் தன் கண்ணிலே ஒற்றிக்கொண்டான். தன் கையைக் கொண்டு என் நெற்றியைத் தடவினான். தாயைப் போல இனிமையாகப் பேசினான் என்றாலும் கள்வன் போல அவன் கொடியன். அவன் மலையில் வாழ்கிறான். அவன் மலையில் அருவி பாயும். பொன் கொட்டிக் கிடப்பது போல வேங்கை மலர்கள் கொட்டிக் கிடக்கும். அது மிகவும் உயர்ந்த மலையாக இருக்கிறது. அங்குள்ள மூங்கில் தன் ஆடும் கழை உச்சிகளால் ஓடும் மழைமேகங்களைக் கிழிக்கும். உச்சி உயர்ந்த பெரும் பாறை அடுக்குகளையும் கொண்டதாக இருக்கிறது.