• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் இபிஎஸை – ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் சந்தித்து வாழ்த்து

சேலத்தில் ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்தால் அதிமுக வெற்றி பெறும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் நம்பிக்கை தெரிவித்தார்.


சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, இந்திய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் ஜெயசீலன் நேரில் சந்தித்தார். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த ஐஜேகே நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன்,” ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பரப்புரை களத்தில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.