• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கடையநல்லூரில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..!

Byவிஷா

Apr 5, 2023

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகர இப்தார் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். கே. டி. பி. காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம். பி. ராம சுப்பு மற்றும் ராம்மோகன், அப்துல்லா யூசுப், பஷீர்முகமது, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகவேல் வரவேற்றார். விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் செல்லக்குமார் எம். பி. , எம். எல். ஏ. க்கள் ரூபி மனோகரன், சதன் திருமலைக்குமார், முன்னாள் எம். பி. திருச்சி வேலுச்சாமி, முன்னாள் எம். எல். ஏ. ரவிஅருணன், ஹிதாயத்துல்லா, பேராயர் எட்வர்ட்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பாக்யராஜ், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நரேந்திரதேவ், மாணவர் காங்கிரஸ் மாரிக்குமார், மாவட்ட பொதுச் செய லாளர் கணேசன், எஸ். டி. பி. ஐ. மாவட்டத் தலைவர் யாசர்கான், ஜாபர்அலி உஸ்மானி, த. மு. மு. க. பாஷித், தி. மு. க. மாநில பேச்சாளர் எம். என். இஸ்மாயில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.