• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மக்கள் மயக்கத்தில் இருந்தால் கேள்வி கேட்கமாட்டார்கள்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 1, 2025

காரைக்கால் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி நிஷா மற்றும் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி என்.ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டது.

ஆனால் முதலமைச்சர் ரெங்கசாமி தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றுக் கூட நிறைவேற்றவில்லை என்றும், எதிர்கட்சிகள் கேட்டால் படிபடியாக நிறைவேற்றி வருவதாக கூறி வருகிறார் என்றும், முதலமைச்சர் ரெங்கசாமி படிபடியாக நிறைவேற்றி வருவது ரெஸ்டோ பார்களை தான் என நாராயண சாமி பேசினார்.

மேலும். ஒரு ரெஸ்டோ பார்களை திறப்பதற்கு 40 லட்சம் லஞ்சம் வாங்குவதாக கூறிய அவர் ரெஸ்டோ பார்கள் திறப்பதற்கு காலையில் விண்ணப்பித்தால் மாலையில் அனுமதி கிடைத்துவிடும் என கூறினார். மேலும் மக்கள் மயக்கத்தில் இருந்தால் தான் கேள்வி கேட்கமாட்டார்கள். எனவே தான் ரெஸ்டோ பார்களை முதலமைச்சர் திறப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டினார்.