• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சட்ட உத்தரவாதம், ஆதார விலை அளிக்கப்படும் – காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங்

BySeenu

Feb 17, 2024

கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பான விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக அது அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை ஏற்று 2014ம் ஆண்டு பதவி ஏற்ற பிரதமர் குறைந்தபட்ச ஆதார விலை செயல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்து இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும், பாரத் ரத்னா வழங்கி கௌரவிக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை செயல்படுத்துவதே அவருக்கு செலுத்தும் நன்றி கடன் என தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதார விலை 50% அளிக்கப்படும் என அறிவித்து ஆட்சிக்கு வந்த பாஜக உச்ச நீதிமன்றத்தில் இதனை செயல்படுத்த முடியாது எனக் கூறியுள்ளது, நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்திய போது, இது குறித்து பரிசீலனை செய்யப்படும் கூறியிருந்ததாகவும் ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மத்திய அரசிற்கு இதனை நினைவூட்டும் வகையில் தலைநகரை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்று அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஜக ஆளும் ஹரியானாவில் காவலர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு விரட்டி அடிக்கப்பட்ட சம்பவத்தை இந்த நாடு அறியும் என தெரிவித்தார். அமைதி பேரணியாக சென்ற விவசாயிகளை பாஜக அரசு மற்றும் ஹரியானா அரசு அமைதிப் பேரணி நடத்திய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வழங்குவதை நிறுத்தியது பொதுமக்களிடையே விவசாயிகள் மீது அவப்பெயரை ஏற்படும் வகையில் அமைந்தது என தெரிவித்தார். 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைவதற்கு முன்பு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு உறுதி மொழிகளை அளித்திருந்தார் எனக்கு கூறிய அவர் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அனைத்தும் கொண்டுவரப்படும் எனக் கூறியிருந்த அவர் காங்கிரஸ் கட்சியின் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்த அவர், அனைவரது வங்கிகளிலும் 15 லட்சம் பணம் வரவு வைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். பதவிக்கு வந்தவுடன் இந்தியர்கள் அனைவரையும் வங்கிகளில் பூஜ்ஜிய இருப்பு கணக்கை துவக்க வேண்டும் எனவும் விரைவில் அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் பத்தாண்டுகள் ஆட்சி நடைபெற்ற முடிந்த நிலையில் இதுவரை அந்த பணம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை என தெரிவித்தார். மேலும், நரேந்திர மோடி வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்த நிலையில் இதுவரை 20 கோடி பேர் வேலைவாய்ப்புகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஆனால் இது எதுவுமே நடைபெறவில்லை எனவும் கடந்த 45 ஆண்டுகளில் வேலை வாய்ப்பில்லாமை ஏற்பட்டுள்ளது எனக் கூறிய அவர் மத்திய அரசு பல்வேறு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும் இதை மத்தியில் ஆளும் மோடி அரசு நிரப்பாமல் உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் குறித்த தீர்ப்பை வழங்கியது. இதில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த போவதாக கூறி தேர்தல் பத்திரத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது, 2017ம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை பாஜக அரசு 6566 கோடி தேர்தல் பத்திரமாக பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 1123 கோடி மட்டுமே தேர்தல் பத்திரமாக பெற்றுள்ளது எனவும், தங்களை வளர்த்தி கொள்வதற்காக இந்த தேர்தல் பத்திர முறையை பாஜக கொண்டு வந்ததாகவும் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் 9 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியை கண்டு பாஜக பயப்படுவதாகவும் இது கீழ்த்தரமான செயல் என சாடினார்.

2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும் என்று கூறியிருந்தார், ஆனால் விவசாயத்திற்கு எதிரான பல்வேறு காரணங்களினால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என்று பாஜக கூறியிருந்த நிலையில் தற்பொழுது வரை எத்தனை பேருக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். அதேபோல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்களில் காகிதத்தில் இடம்பெற்றுள்ளதே தவிர எதுவும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற தவறான நடவடிக்கைகளால் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வரலாறு காணாத அளவில், டீசல் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும் சர்வதேச சந்தைகளில் க்ரூடாயில் விலை குறைந்துள்ள நிலையிலும் தற்போது பெட்ரோல் டீசல் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் 10 ஆண்டு காலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக மக்களுக்கு அநீதிகளை மட்டுமே செய்துள்ளதா குற்றம் சாட்டினார். பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்த பாஜக அரசு பொதுமக்களுக்கு என்ன செய்தது என காங்கிரஸ் கேள்வி எழுப்புவதாகவும் காங்கிரஸ் ஆட்சியின் பொழுது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து இருந்ததாகவும் கூறினார்.

மணிப்பூர் கலவரங்கள் மோடி நடைபெற்றதிலிருந்து இதுவரை அங்கு செல்லாத பிரதமர் மோடி, அங்கு செல்வதை முக்கியமாக கருதவில்லை எனவும் தேர்தல் நடைபெறும் பொழுது வாக்குகள் பெறுவதற்காக மட்டுமே அங்கு செல்வார் எனவும் தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்தான கேள்விக்கு காங்கிரஸ் உயர்மட்ட குழு இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அது குறித்து நான் பதில் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணி குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்ட வருவதாகவும் காங்கிரஸ் உயர்மட்ட குழு கூடி அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செல்லும் என்றார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொகை குறித்து அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, தேர்தல் பத்திரங்கள் எதற்காக துவங்கப்பட்டது என கேட்டபோது கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சி என கூறப்பட்டதாகவும், மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது என தெரியும் என கூறினார். இதனை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் யாரிடம் இருந்து பணம் பெற்றார்கள் என கூற தயாராக உள்ளனரா எனவும் கேள்வி எழுப்பினார்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், இது நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்குவதாகவும் இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையின்மை அடைவார்கள் என தெரிவித்தார். பாஜக அரசு CBI, ED போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நாட்டில் உள்ள பல்வேறு எதிர் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனை மத்தியில் ஆளும் மோடி அரசு சமரசம் செய்து எதுவுமே நடைபெறாதது போல் காண்பிப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் கடன் சுமை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் 2014ம் ஆண்டு 55 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது அப்பொழுது 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கூறினார். இன்னும் சில மாதங்களில் இவை அனைத்தும் கடந்து அநியாயங்கள் முடிவுக்கு வரும் என்று கூறிய அவர் அதற்கான நேரம் துவங்கிவிட்டது எனவும் தெரிவித்தார்.

ராமர் கோயில் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அது மனதில் தான் இருக்க வேண்டும் எனவும் அது குறித்து விளம்பரம் கூடாது என பதில் அளித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் இறுதியாக காங்கிரஸ் தலைமை கூட்டணி குறித்து அறிவிக்கும் என்று கூறினார்.மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பலம் உள்ளது அதற்கு ஏற்றவாறு திமுக சீட் கொடுப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி உள்ளது அதற்கு ஏற்றவாறு கட்சி செயல்படும். பாஜகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார். மேலும் விடுதலை போராட்டம் காலத்தில் பாஜக பங்கேற்கவில்லை.தற்பொழுது காங்கிரஸ் வெற்றி பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாஜக வீணாக்கி உள்ளது.
பாராளுமன்றத்தில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி சாதனை குறித்து பிரதமர் மோடி பேசாமல் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பேசி மக்களை திசை திருப்புகிறார்.
10 ஆண்டுகள் பாஜக செய்த அநீதியை கிராமந்தோறும் எடுத்துச் சென்று மக்களுக்கு விளக்குவோம் என்றும் பாஜக ஆட்சி பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு கிடையாது என்று விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் பொறுத்தவரை திமுக நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதாகவும் காங்கிரசுக்கு திருப்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த ஆட்சியில் அதிமுக பிஜேபி உடன் மண்டியிட்டு தமிழகத்திற்கு அவபெயரை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.