மதுரை காளவாசல் பகுதியில் மதுரை மாநகர காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக மாநகரப் பகுதியில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களின் ஹாரன்களை அப்புறப்படுத்தி அபராதம் விதித்தும்.. மேலும் இதுபோன்று ஆரன்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது..

இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன்.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ( தெற்கு வட்டார போக்குவரத்து } மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்… இது குறித்து அதிகாரிகள் பேசும் பொழுது.. இருசக்கர வாகனங்களுக்கு எண்பது டெசிபல் அளவும்.. மூன்று சக்கர வாகனங்களுக்கு 82 டெசிபல் அளவும்.. நான்கு சக்கர வாகனங்களுக்கு 85 பேசிக் கொள்ளளவும்.. கனரக வாகனங்களுக்கு 92 வரையிலான டெசிபிளளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

இதனை மீறும் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.. மேலும் இந்த ஒளி அதிக சத்த ஒலி எழுப்பதனால்..சாலையில் செல்லக்கூடிய பாதசாரிகள்.. வாகனத்தில் பயணிக்க கூடிய குழந்தைகள் முதியோர்கள் இதய நோயாளிகள்..அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சாலையின் ஓரம் இருக்கக்கூடிய விலங்குகள் இந்த சப்தத்தினால் பயந்து சாலையில் செல்லும் பொழுது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இந்த விபத்தினை தவிக்கும் வகையில் அதிக சத்தங்களை நீக்கம் செய்து அனுமதி அனுமதிக்கப்பட்ட சப்தத்துடன் வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.








; ?>)
; ?>)
; ?>)