• Thu. Apr 24th, 2025

உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இபாஸ் சோதனை..,

ByG. Anbalagan

Apr 1, 2025

நீலகிரி மாவட்டம் கல்லார் சோதனை சாவடியில் நீலகிரிக்கு செல்லும் வாகனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இபாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. நீலகிரி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இப்படி வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் அடுத்துள்ள கல்லார் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து உள்ளனரா என காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லார் இபாஸ் சோதனை சாவடியில் நீலகரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தினமும் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. அரசு பஸ், ஆம்புலன்ஸ் சரக்கு வாகனங்கள், நீலகிரி மாவட்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ-பாஸ் தேவையில்லை.தற்போது வரை 2,500 வாகனங்கள் வந்துள்ளன. இந்த நடைமுறை நன்றாக சென்றுக்கொண்டு இருப்பதாகவும்,

கல்லார் இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக ஆட்டோமெட்டிக்காக, செக் செய்யும் வகையில் இந்த பூம் பேரியர் அமைய உள்ளது. அடுத்த வாரம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று தெரிவித்தார்.இதனால் பணியில் ஊழியர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற செக்போஸ்ட்களிலும் நடைமுறைப்படுத்த உள்ளோம் என்றார்.

வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு இல்லை என சொல்ல முடியாது. அருகில் உள்ள வெளிமாநில கலெக்டர்கள், போலீஸ் உள்ளிட்டோருக்கு இ-பாஸ் தொடர்பாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.