மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கியது.

ஐ.சி.எஸ் படித்த பேர்பிரைன், லாக்லின் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பண்டா, ஸ்ரீபதி, ஷீலாபிரியா, சௌபே, ஹேமந்த்குமார் சின்கா ஆகியோரும் கடந்த 1994 ஏப்ரல் முதல் 1995 செப்டம்பர் வரை பாபுலால் மீனா உதவி ஆட்சியராக பணியாற்றினார்.
அதன் பின் வருவாய் கோட்டாச்சியர்களே நியமிக்கப்பட்டு வந்த சூழலில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியராக பணியாற்றிய சண்முக வடிவேல் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்துள்ள உட்கர்ஷ் குமார் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று 30 ஆண்டுகளுக்கு பின் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்றுக் கொண்டார்.