

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் கமர்சியல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. டைரி, தேஜவு, டி பிளாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி சிவகார்த்திகேயன் போல படங்கள் பண்ணுவது ரொம்பவே கஷ்டம் என கூறியுள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அருள்நிதி ஆரம்பம் முதலே மௌனகுரு, ஒரு கண்ணியும் மூனு களவாணிகளும், டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம் எனத் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அருள்நிதி, சிவகார்த்திகேயன் பண்ற மாதிரி படங்கள் பண்றது ரொம்ப கஷ்டம் எனப் பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் படங்களில் எல்லாவிதமான வெரய்ட்டி பர்ஃபார்மன்ஸ் கொடுக்க வேண்டியதிருக்கும். நடிப்பு, காமெடி, நடனம் என அனைத்து வெரய்ட்டிகளிலும் நடிக்க வேண்டியது இருக்கும். மேலும் அவரது படங்களில் கதையை படத்தை தாங்குவதற்கு இணையாக சிவகார்த்திகேயனும் அந்த படத்தை தாங்குவார். ஏதாவது ஒரு இடத்தில் கதையே கொஞ்சம் வீக்காக இருந்தாலும் அந்த இடத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துவார். ஆனால் அதுபோல செய்யும் சக்தி எனக்கு கிடையாது. எனவே சிவகார்த்திகேயன் போல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது ரொம்பவே கஷ்டம்.
எனக்கு திரில்லர் மற்றும் ஆக்சன் கதைகளில் நடிப்பதில் மிகவும் சுலபமாக உள்ளது. அந்த வகையில் இப்பொழுது தேஜவு என்ற திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து மிக விரைவிலேயே படம் ரிலீசாக உள்ளது. அதைத்தொடர்ந்து டைரி, டி ப்ளாக் உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இவை அனைத்தும் என்னுடைய முந்தைய படங்களைப் போலவே நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும் படங்களாக இருக்கும், என்றார்.

