• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசிடம் தேவையான நிதிகளை பெற்று தருவேன்… அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பேச்சு..,

ByG.Suresh

Apr 12, 2024

சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர் தாஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் காளையார் கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த புலியடித்தம்பம் பள்ளி தம்மம், சூசையப்பரபட்டினம், காளையார் கோவில், மறவமங்கலம், பருத்திக் கண்மாய், பாகனேரி, சொக்கநாதபுரம், மேலமங்கலம், காளையார் மங்கலம், சூரக்குளம் மற்றும் நாட்டரசன் கோட்டை உள்பட 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவட்ட செயலாளர் பி. ஆர். செந்தில்நாதன் தலைமையில் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது நடந்த கூட்டங்களில் சேவியர் தாஸ் பேசியதாவது:-

நான் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவன் சரி, இந்த வழியாக மட்டுமே நான் சென்று வருவேன். எனக்கு உங்களது பிரச்சனைகள் என்னவென்று தெரியும். பொதுவாக கிராம மக்களுக்கு பாதுகாப்பாக அரணாக இருந்தது. அதிமுக நான் வெற்றி பெற்றால் காளையார் கோவிலில் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அரசு கலைக் கல்லூரி அமைக்கவும், காளையார்கோவிலில் உள்ள என்.டி.சிமில்லை மீண்டும் இயக்க மத்திய அரசிடம் தேவையான நிதிகளை பெற்று தருவேன். இந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேன். வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அவர்கள் கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும் நான் உங்களுடன் ஒருவராக இருப்பேன். எனவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஜே. பேரவை செயலாளர் இளங்கோவன் ஒன்றிய கழக செயலாளர் ஸ்டீபன் அருள்சாமி பழனிசாமி சிவாஜி நாட்டரசன் கோட்டை பேரூர் கலா செயலாளர் கண்ணப்பன், மற்றும் ஆர். எம் .எல் .மாரி மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின், வெண்ணிலா பாசறை மாவட்ட இனைச் செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.