• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்..,

BySubeshchandrabose

Mar 25, 2026

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை, சட்டமன்றம், நாடாளுமன்றம் என கடந்த 10 தேர்தலிலும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்து இருக்கும் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை, மக்களை நம்ப வைக்க இவர் அறிவிக்கும் தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபடாது.

தென்மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன் மக்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளது தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றிபெறும்

போடி தொகுதியில் நான் எம்எல்.ஏ வாக இருந்த போது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என தெரியவில்லை? அதிமுக கூட்டணிக் கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள்

அதிமுகவில் தொண்டர்களே தற்போது இல்லை அங்கு இருந்த லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அனைவரும் திமுகவில் இணைந்து விட்டனர்

மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வரும் என தெரிவித்தார்

ராமதாஸ் – சசிகலா வைத்துள்ள கூட்டணியால் எங்களுக்கு எந்த பாதகமும் இல்லை அவர்களது கூட்டணிக்கு எங்களது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்

திமுகவிற்கு அரசியல் களத்தில் எதிரிகள் என யாரும் இல்லை விஜய் முதலில் அரசியல் களத்தில் தன்னை முதலில் நிரூபிக்க வேண்டும்

கொரோனா காலத்தில் 140 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருந்தால் அப்போதே மதுபான கடைகளை முழுவதுமாக மூடி இருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை என விமர்சனம் செய்தார்

தமிழகத்தில் போதை புழக்கம், பாலியல் குற்றங்கள் நடைபெறுவது இயற்கை தான் ஆனால் அதற்கு திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றால் நான் தூக்கில் தொங்குவேன் என்று கூறிய டிடிவி தினகரன் தற்போது எடப்பாடி பழனிசாமியை மதிப்பிற்குரிய அண்ணன் என்று கூறுகிறார்

கட்சியில் மீண்டும் தன்னை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள் என மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கூறினேன் ஆனால் நான் கூறியும் எடப்பாடி பழனிச்சாமி என் பேச்சை கேட்கவில்லை என தெரிவித்துவிட்டார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் ஆலோசனை செய்த போது 150 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி ஆனால் தோல்வியை சந்தித்தார்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.