டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்,

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் முடிவை நான் வரவேற்கின்றேன்.
அவர் நம்முடைய திராவி மாடல் முதல்வர் அண்ணன் தளபதி அவர்களுடைய கரங்களை வலுப்படுத்துவதற்கு அண்ணன் ஓபிஎஸ் இன் அந்த முடிவை நான் வரவேற்கிறேன்.
அன்வர் ராஜா எந்த நோக்கத்திற்காக இங்கு வந்துள்ளார் என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுகவில் இத்தனை ஆண்டுகளாக இருந்துவிட்டு இன்று திமுகவில் இணைந்து இருக்கிறார்கள். அதற்குண்டான விளக்கம் அவர் கண்டிப்பாக கொடுத்து இருப்பார் அதை நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.