அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிம் பேசுகையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்த அமைச்சர் துரைமுருகன் ….அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு ‘யாமறியேன் பராபரமே’ என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது. அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம்; அதை அவரே முடிவெடுப்பார். தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவில்லை. நான் இரண்டு நாட்களாக சென்னையில் இல்லை. நடக்கும்போது அனைத்தும் நடக்கும். நான் ஆளுநரை சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.