

ஹைதராபாத் – மதுரை இன்டிகோ விமானம் மதுரை விமான நிலையத்தில் மேக மூட்டத்துடன் வானிலை சரியில்லாத காரணத்தினால் கோவையில் தரையிறங்கியது.
ஹைதராபாத்தில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானம் மாலை 6:40 அளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும். தற்போது வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலையில் கோயம்புத்தூர் சென்று இண்டிகோ விமானம் 7.20 மணியளவில் தரையிறங்கியது.
ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு பயணம் செய்த 221 பயணிகளும் கோவை விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். விபரம் எரிபொருள் நிரப்பிய பின் மீண்டும் 221 பயணிகளுடன் மதுரை விமான நிலையம் வந்தடையும்.
வானிலை காரணத்தால் மதுரை வரவேண்டிய விமானம் கோயம்புத்தூர் சென்றதால் பரபரப்பாக காணப்படுகிறது.
