

பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் திடீரென குறுக்கிட்ட கிடை மாடுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
என் மண், என் மக்கள் என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழகத்தில் எட்டாவது நாள் நடை பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தனது தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.
பாஜக தொண்டர்கள் ஜல்லிகட்டு காளையுடன் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடங்கிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் சென்ற கார் அணிவகுத்து சென்றது.
அப்போது திடீரென சாலையில் அவரது காரை வழிமறித்த கிடை மாடுகள் சுமார் 10 நிமிடம் அவரை, அவரது கார்களை வழிமறித்து நடுவழியில் நிறுத்தியது. பின்னர் தனது நடைபயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்தார்.
