பெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்றதால் மனவிரகத்தியில், கணவன் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் இவரது மனைவி சுகன்யா மற்றும் பிள்ளைகளுடன் சாத்தனூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் செல்வகுமார் பெரம்பலூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருவதாகவும், இவர் ஆலம்பாடி சாலையில் உள்ள எம்ஜிஆர் நகரில் பெரியசாமி என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
இவருக்கு தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் மனைவி சுகன்யா தனது பிள்ளைகளுடன் பெற்றோரின் ஊரான பில்லங்குளத்திற்கு சென்று வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நீண்ட நேரமாக கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பெரியசாமி கதவை உடைத்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பெரியசாமி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்த காரணத்தால் மன உளைச்சளுக்கு ஆளான செல்வகுமார், மது போதையில் தன்னைத்தானே கழுத்தை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
குடும்ப பிரச்சனை காரணமாக நடந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.