புதுச்சேரி கல்வித்துறையால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட 290 கௌரவ ஆசிரியர்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கௌரவ ஆசிரியர்களின் பணிக்கால ஒப்பந்தம் இந்த கல்வி ஆண்டு நிறைவடைவதாக அவர்களை பணி நீட்டிப்பு செய்ய முடியாது எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கௌரவ ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து நிலை ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் காரைக்கால் முதன்மை கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

ஆசிரியர் பணியில் நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களின் கனவு பொய்யாக்கப்பட்டதாகவும் இவர்களில் பெரும்பான்மையானோர் 35 வயதை கடந்த நிலையில் இனி அவர்களால் எந்த அரசு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளது இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு உடனடியாக கௌரவ ஆசிரியர்களின் பணியை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் மாவட்ட தலைவர் சந்திரமோகன் மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியின் கலந்து கொண்டனர்.






