• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அரிமளத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்..,

Byமுகமதி

Mar 7, 2026

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரிமளத்தில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரிமளம் கே வீரம்மாள் ஏஜென்சிஸ் பாரத் பெட்ரோலியம் இணைந்து ஏற்பாடு செய்து கண் சிகிச்சை முகாமை என்று நடத்தினார்கள்.

அதற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மருத்துவர் மற்றும் செவிலியர் குழுவினர் அரிமளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்தினார்கள்.
கண்களில் ஏற்படும் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை கூறப்பார்வை வெள்ளெழுத்து மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் மாலைக்கண் நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் இந்த முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவமும் செய்யப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் வந்து சிகிச்சையும் மருத்துவ பயனும் பெற்றுக் கொண்டனர். கண் அறுவைச் சிகிச்சைக்காக ஆண்கள் பெண்கள் என எழுபது பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லயன்ஸ் கிளப்பின் தலைவர் ஆசாத், செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உதவிகளும் செய்தனர்.