• Sat. Apr 27th, 2024

வரலாற்றில் எப்படி நுழைந்தது புத்தாண்டு…

Byகாயத்ரி

Jan 1, 2022

உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் சுவாரஸ்யமூட்டும் வரலாறே இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தும் முந்தைய காலங்களில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படவில்லை. அந்த காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச் மாதம் தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் 2 மாதங்களை சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் ஆகிய மாதங்கள் சேர்க்கப்பட்டன.

புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில் தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டருடன் ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தனர்.எனினும் இதில் பல்வேறு குழப்பம் நீடித்த நிலையில் இறுதியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார்.இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று நாம் பின்பற்றி, புத்தாண்டை கொண்டாடி வருகிறோம்.

எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு முன் கதையும் வரலாறும் இருந்துக்கொண்டே தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *