• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

படம் எப்படி இருக்கும் ?? பாகுபலி போல் இருக்குமா..? மணிரத்னம் கூறிய பதில்..

Byகாயத்ரி

Sep 7, 2022

பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் மணிரத்னம் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக இருந்து வந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பேசிய மணிரத்னம் “செக்க சிவந்த வானம் படம் முடித்த பிறகு என்ன செய்ய ஆசை என லைகா சுபாஸ்கரன் என்னிடம் கேட்டார். அதற்கு நான் பொன்னியின் செல்வன் எடுக்கப்போகிறேன் என கூறினார். அவர் அதற்கு சம்மதித்தார். இந்த படம் பாகுபலி போல, பத்மாவதி போல இருக்குமா என அவர் கேட்டார். நான் அதற்கு கல்கி விரும்பியபடி படம் இருக்கும் என சொன்னேன்” என்று கூறினார்.