• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹாஸ்டல்’ – மலையாள ஒரிஜினலைவிடவும் தமிழ் ரீமேக் சிறப்பாக இருக்குமாம்..!

தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாஸ்டல்’.இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காகும். “இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்
“நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “எனது அனைத்து திரைப்படங்களுக்கும் ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி.

ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார். பிரியா நன்றாக நடித்துள்ளார். அவர் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகையாகிவிட்டார். சதீஷ் தனித்துவமான ஸ்கிரிப்ட்களுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, பெரிய உயரங்களை எட்டத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

க்ரிஷ் மற்றும் யோகி இருவரும் ‘ஹாஸ்டல்’ போன்ற இந்த நல்ல திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதற்கு நன்றி. நாசர் சார் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனிஸ்காந்த், ரவி மரியா சார், அறந்தாங்கி நிஷா மற்றும் ஏனைய நடிகர்கள் அவர்களது பணியை சிறப்புடன் ஆற்றியுள்ளனர்.ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம். அவர் கூறியது போல், அனைவரும் அனுபவித்து பாராட்ட வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.