• Sun. Jun 4th, 2023

பேய்க்கு அஞ்சி 9 மணிக்குள் கதவை அடைக்கும் திகில் கிராமம்…

Byvignesh.P

Jun 24, 2022

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதைப் போல் பேய் என்றால் ஊரே நடுங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். நாம் சிறுவயதில்பல பேய் கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அந்த வகையில் பேய்க்கு பயந்து இரவு 9 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா..?? ஆமாம் இப்படியும் ஒரு ஊர் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது T. புதுக்கோட்டை என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் தூக்கு போட்டு இறந்தவர் மற்றும் விஷம் குடித்து இறந்தவர்களின் ஆத்மா அந்த ஊர் மக்களை தொந்தரவு செய்வதாக கூறப்பட்டு வருகிறது. T.புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் மூன்று தலைமுறையாக இரவு 9 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடை பற்றி தெரிந்து கொள்வதற்கு அந்த கிராமத்தில் உள்ள பெரிய சுப்பிரமணி என்ற 50 வயது முதியவரை நேரில் சென்று கேட்டபோது அவர் திடிக்கிடும் நிகழ்வுகளை கூறினார்.

பேட்டி: முத்தம்மாள்
T. புதுக்கோட்டை கிராமம்

அங்குள்ள கருவேல குகைக்குள் யாரும் தனியாக செல்லக்கூடாது என்று கூறினார். நாம் முன்னால் சென்றாலும் நம்மை பேய் பின் தொடரும் என்றும் நம்பப்படுகிறது. பேய் அடித்த நபரை அந்த ஊர் சாமியாடி விபூதி போட்டு அந்த ஆத்மாவை விரட்டி விடுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. விரட்ட முடியாத ஆத்மாவை அசல் ஊருக்கு சென்று விரட்டுவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அல்லது சிறு குழந்தைகளாக இருந்தாலும் வெளியில் சொல்வதற்கு பயத்துடன் இருப்பதாக கூறினார். பாதிக்கப்பட்ட நபரை பார்க்க முடியுமா என்று நம்து தரப்பில் கேட்டபோது அவர்களை பார்ப்பதற்கு தடுத்தனர். அந்த கருவேல குகை இருக்கும் இடத்திற்கும் பார்க்க அனுமதிக்கவில்லை. நீண்ட வற்ப்புறுத்தலுக்கு பிறகு அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கருவேல குகை அடர்ந்து காணப்பட்டது. அந்த இடத்தில் பகுதி தொலைவில் மட்டுமே உள்ளே சென்று பார்க்க அனுமதித்த ஊர் மக்கள் இதற்கு மேல் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறினார்கள்.இதுகுறித்து மேலும் தெரிந்துக்கொள்ள அந்த ஊரில் வசிக்கும் முத்தம்மாள் என்பவரிடம் பேட்டி எடுத்தோம். 10 வருடமாக இந்த பேய் நடமாட்டங்கள் இருப்பதாகவும் ஆனால் சாதாரண மக்கள் கண்களுக்கு பேய்கள் தெரிவத்தில்லை எனவும் கூறினார்.

பேட்டி: முத்தம்மாள்
T. புதுக்கோட்டை கிராமம்

இவ்வளவு பயத்துடன் ஒளிந்து வாழும் இக்கிராம மக்களின் நிலை இப்படியே போய்விடுமா… இது வெறும் மூட நம்பிக்கையா, கட்டுக்கதையா அல்லது நிஜம் தானா… உங்கள் பார்வையில் இக்கிராமம் எப்படி தெரிகிறது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *