• Sat. Apr 20th, 2024

*வீடு தேடி கல்வி திட்டம் – கலைப்பயண வாகனத்தை துவக்கி வைத்த சேலம் ஆட்சியர்*

வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக முழுவதும் கொரானா காலத்தில் கட்டங்களில் இடைநின்ற குழந்தைகளுக்கும் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் வகையில் வீடுதேடி கல்வித் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவில் கலை குழுக்களை ஏற்படுத்தப்பட்டு, இந்த கலைக்குழுவினர் மாவட்டந்தோறும் வீடு தேடி கல்வி திட்டத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கலைக்குழு துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கலைக்குழுவின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். மேலும் கலைக்குழுவினர் தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வீடு தேடி கல்வித்திட்ட பயன்பாட்டை குறித்து எடுத்துரைத்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இந்த கலைக்குழுவினர் கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் ஏழை எளியோர் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு கலைக்குழுவின் மூலம் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைக்க உள்ளது. இதற்காக குழுவினருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *