• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Byவிஷா

May 1, 2025

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மைந்தனான ஜாக்கி சான் 90களில் சர்வதேச திரையுலகையே கலக்கிய ஆக்ஷன் ஹீரோவாக வளம் வந்தார். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், ‘தி ஃபியர்லெஸ் ஹைனா’ (1979), ‘ஹ_ ஆம் ஐ?’, ‘போலீஸ் ஸ்டோரி’ (1985) உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் கலையுலகில் அவரது பங்களிப்பை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. லொகர்னோ விழாவின் கலை இயக்குனர் ஜியோனா ஏ. நஸ்ஸாரோ கூறுகையில், “ஜாக்கி சானின் தாக்கம் மிகவும் ஆழமானது, குறிப்பாக ஹாலிவுட்டில் அதிரடி படங்கள் பார்க்கப்படும் மற்றும் தயாரிக்கப்படும் விதத்தை அவர் மாற்றினார்” என்று தெரிவித்தார்.
இந்த திரைப்பட விழா ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 16 வரை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத் திரைப்படமாகவும், 2023-ல் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன படங்களில் டாப் 3 இடத்தையும் பிடித்தது. தற்போது மீண்டும் ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ‘ தி ஷேடோஸ் எட்ஜ்’ என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.