

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோவிலில். ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி மாத திருவாதிரை தினத்தன்று, சில வருடங்களாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வழிபாட்டிற்கு ராஜேந்திர சோழன் படத்தை கோவிலின் முன்பு வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் தமிழக முதல்வர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில். மாமன்னன் இராஜேந்திரசோழனின் பிறந்த நாளான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று அரசு விழா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் வழிபட அஞ்சலி செலுத்த ராஜேந்திர சோழன் படம் வைக்கவில்லை என்று கூறி இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வருடமும் ஏதேனும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் இந்து முன்னணியினர் ஈடுபடுவார்கள் என்று முன்னெச்சரிக்கையாக காவல்துறை தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமையில். மாவட்டத் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் அய்யன் பெருமாள், மாவட்ட செயலாளர் ராஜா உட்பட ஏராளமானோர் பிரகதீஸ்வரரை வழிபட கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும்போது முன்னெச்சரிக்கையாக போலீசார் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் வலுக்கட்டாயமாக இந்து முன்னணியினர் 26 பேரை கைது செய்தனர்.



