

இன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கில் சர்வதேச இளைஞர் தின விழா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, மைக்ரோ பயாலஜி டாக்டர் பாரதி, செவிலியர் பள்ளி முதல்வர் (பொ) மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நர்சிங் மாணவிகள் சர்வதேச இளைஞர் தின விழா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அரசு இராசாசி மருத்துவமனை ஐசிடிசி ஆலோசகர் ராஜு, ஆய்வக நுட்புநர் தங்கபிரபு, பிரதர் சிகா, பேஸ், நிலா, தாய் விழுதுகள் அறக்கட்டளை, ஒய்ஆர்ஷி ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலர்கள்,முத்து, ரமேஷ், பானுமதி, பகிர் வாவா, பாண்டிச்செல்வி, ஜோஸ்வா, காயத்ரி, களப்பணியாளர் ராமன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், கலந்து கொண்டனர்.
