புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசே கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியின் மீது தீபம் ஏற்றுவதற்கு சென்னை நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது நிலையில் தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலை மீது இந்து முன்னணியினர் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து ஏற்ற விடாமல் தடுத்து கைது செய்தனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பாஜக மாநகர தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அண்ணா சிலை அருகே தமிழக அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நரை நகர காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.




