அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என கூறமுடியாது வெற்றிதோல்விகளை மாறிமாறி எதிர்கொண்டுவரும் இவர்
இயக்குனர் வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்ப்பை பெற்றது அதற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியானது இந்த படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில்அஜித்குமார்நடித்துள்ளார். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் வலிமை படத்திலும் இணைந்துள்ளது. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.
இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், தீபாவளிக்கே வலிமை படம் ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த ஆண்டு பொங்கல் அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது ஒரு வழியாக பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளது வலிமைஇந்த நிலையில் இயக்குனர் வினோத்குமார் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அந்த வேலைகள் நிறைவடைந்த பிறகு படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஹீரோயினாக நடிக்க இந்தி நடிகை தபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார்தற்போது 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்-தபு இணைந்து நடிக்கிறார்கள். நடிகை தபு இறுதியாக 2013 ஆம் ஆண்டு டேவிட் படத்தில் நடித்து இருந்தார். தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜீத்துடன் 22 ஆண்டுகள் கழித்து இணையும் இந்தி நடிகை தபு
