• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டத்தில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

ByI.Sekar

May 1, 2024

தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட தாட்கோ மேலாளர் சரளா எம்எம்டி நர்ச்சர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் கல்வியில் சாதிக்க வேண்டும். உதவித்தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, போட்டித் தேர்வில் முன்னுரிமை போன்ற பல்வேறு அரசு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாய்ப்பினை மாணவ மாணவிகள் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயர்ந்திட வேண்டும். மருத்துவம் ,பொறியியல் , விவசாயம் யுபிஎஸ்சி ,ஐஐடி மற்றும் கலை அறிவியல் தொழில்நுட்பம் என பல துறைகள் பற்றியும், உயர் கல்வி பயில உதவித் தொகை திட்டம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஏற்பட்ட ஐயம் தொடர்பான கேள்விகளுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.மேலும் 12 ம் வகுப்பிற்கு பிறகு உயர் கல்வி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பட்டய பாடப்பிரிவுகள் குறித்து விரிவான விளக்கத்தை மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டிய சனில்குமார் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் சுவாதி உத்வேக்க பயிற்சியளித்தார். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட துணை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமை ஆசிரியர் நிக்சன் அப்தாஹிர், நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி துணை முதல்வர் சத்யா, எம்எம்டி நர்ச்சர் இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை எம்எம்டி நர்சர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளாதேவி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக தனி வட்டாட்சியர் சுருளி நன்றி கூறினார்.