திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு வளைவு இடத்தில் இன்று 130வது நேதாஜி பிறந்தநாளை கொண்ட திருநகர் காவல் நிலையத்தில் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக நேற்று அனுமதி கேட்டு மனு அளித்தார்.

இதற்கு திருநகர் காவல் நிலை யத்தின் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி சார்பில் நேற்று சென்னை (மதுரை கிளை) உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்க எடுத்து அனுமதி வழங்கியது.
அதன் அடிப்படையில் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை தலைவர் சசிக்குமார் செயலாளர் சரவணன் பெருளாளர் அழகு சுந்தரபாண்டி பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலளார் மோகன் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முத்துராஜா தொழிற் சங்க நிர்வாகி துரை சபின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கிய அறக்கட்டளை இணை செயலளார் கோபிநாத், மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன். மற்றும் அனைத்து கட்சி சார்பாகவும் அனைத்து சமுதாய மக்களுக்கள் திருநகர் மருது நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.






