• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தி லெஜண்ட் பட ஹீரோயின், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் மோதல்..!

Byவிஷா

Aug 14, 2022

தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமன ஊர்வசிரவ்தெலாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட்டுக்கும் மோதல் வலுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன் அருளின் தி லெஜண்ட் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா. அவரும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் காதலித்ததாக முன்பு கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் ஊர்வசி கூறியதாவது,
மிஸ்டர் ஆர்.பி. டெல்லியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் எனக்காக இரவு முழுவதும் காத்திருந்தார் என்றார். இதையடுத்து யார் பெயரையும் குறிப்பிடாமல் இன்ஸ்டாகிராமில் பண்ட் கூறியதாவது,
விளம்பரம் தேடவும், தலைப்புச் செய்தியாக மாறவும் சிலர் பேட்டிகளில் பொய் சொல்வது காமெடியாக இருக்கிறது என்றார். பின்னர் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார்.
பண்ட்டின் போஸ்ட்டை பார்த்த ஊர்வசியோ, சின்னத் தம்பி பேட், பால் விளையாடணும். நீங்கள் அசிங்கப்படுத்த நான் ஏமாற மாட்டேன் என்றார். அந்த போஸ்ட் வைரலானது.
இதையடுத்து நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்திற்காக வருத்தப்படாதீர்கள் என்று இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார் பண்ட். அவர் ஊர்வசிக்காக தான் அப்படி போஸ்ட் போட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஊர்வசியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் பண்ட் ரசிகர்கள். படங்களை போன்று கிரிக்கெட்டில் ரீடேக் இல்லை. அவர் தன் விளையாட்டில் கவனம் செலுத்தட்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.