• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கடும் பனி மூட்டம் – தமிழக கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு

Byமதி

Nov 9, 2021

திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு மாநிலங்களிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மித வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் மெதுவாக செல்வதால் தமிழக கர்நாடக மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.