• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை- கோழிப்பண்ணை சேதம்

ByKalamegam Viswanathan

May 13, 2023

மதுரை அலங்காநல்லூரில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் இறப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை
மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்த நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்தது.


இந்த நிலையில் அலங்காநல்லூர் அடுத்த செல்லணகவுண்டன்பட்டி பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் அப்பகுதியில் பிரசாத் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை இடிந்து தரைமட்டமானது இதில் கோழிப்பண்ணையில் வளர்ப்புக்காக வைத்திருந்த சுமார்1000திற்கும் மேற்பட்ட கோழிகுஞ்சுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன ஏற்கனவே கோழிப்பண்ணை நடத்துபவர்கள் மிகுந்த நஷ்டத்தில் இருந்து வரும் நிலையில் சூறாவளி காற்றிற்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தது பொதுமக்களிடையே மிகுந்த கவலையை உண்டாக்கியது.மேலும் கோழி பண்ணை இடிந்து விழுந்து கோழிக்குஞ்சுகள் உயிரிழந்ததால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு.அரசு உடனடியாக நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்என.அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.