• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை -மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தன

ByKalamegam Viswanathan

Mar 21, 2023

வாடிப்பட்டி பகுதியில் சூறைக்காற் றுடன் பெய்தபலத்த மழையால் மரங்கள்ஒடிந்துவிழுந்து மின்கம்ப ங்கள் சாய்ந்தன இதனால் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கடந்த வாரம் பங்குனி மாதம் தொடங்கியதால் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் முழுவதும் வெப்பத்தாலும் இரவு நேரங்களில் குளுமையாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணி முதல் 6. 15 மணி வரை பலத்த சூறைக்காற் றுடன் கோடை மழை கொட்டி தீர்த்த து. இதனால் வாடிப்பட்டி பகுதியில் பல இடங்களில் மரங்கள் மின்கம் பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட் டது. வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா சிலை அருகில் இருந்த வேப்பமரம் முறிந்து விழுந்தது.

பொட்டுலுப்ப ட்டி பிரிவில் பள்ள மான சாலையால் 3 அடி உயரத் திற்கு தண்ணீர் தேங்கி நின்று வாகனங்கள் மிதந்து சென்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த மகளிர் திட்ட பெயர் பலகை சாய்ந்தது.
கள்ளர் மடம் அருகில் வேம்பு, புங்கை, முருங்கை மரங்களும் குலசேகரன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வேப்ப மரமும்,இரண்டு மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தது. மகாராணி நகர் நுழைவாயில் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகத்திற்கு அமைத்துக் கொண்டிருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகில் நாவல் மரம் வேப்பமரம் ஒடிந்து விழுந்தது. கால்நடை மருத்துவமனை அருகில்லாரி எடை மேடை மேற்கூ ரை சரிந்தது. வி.எஸ்.நகர் எதிரில் வணிக வளாகத்தின் மேல் அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு விழுந்தது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் நகர் பகுதி முழுவதும் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. சாலையோரம் முறிந்த மரங்களை பேரூராட்சி பணியாளர்களும் மின்வாரிய பணியாளர்களும் அகற்றினார்கள். மேலும் மின்வாரிய செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர், போர் மேன்கள் மற்றும் மின் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஒடிந்த மின் கம்பங்களிலிருந்து மின்லயனை சரி செய்தனர்.